
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகள் வாங்க வளைகுடா அரபு நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது அதாவது பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையானது முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு அதாவது 2023 மார்ச் மாதத்திற்கு முன்னதாக இந்த ஏவுகணைகளை கொள்முதல் செய்யும் பொருட்டு இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்பது சிறப்புமிக்க தகவலாகும்.
முன்னாள் இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுபயணமாக சென்ற போது இந்த ஏவுகணை விற்பனை பற்றி பேசபட்டது குறிப்பிடத்தக்க தகவலாகும்.