ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் அமெரிக்க அதிபர் பைடன் !!

  • Tamil Defense
  • December 6, 2022
  • Comments Off on ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் அமெரிக்க அதிபர் பைடன் !!

கடந்த வாரம் ஃபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் அமெரிக்காவுக்கு சுற்றுபயணமாக சென்றிருந்தார் அப்போது கடந்த வியாழக்கிழமை அன்று அவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது இருவரிடமும் உக்ரைன ரஷ்ய போர் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இருவரும் அவர்களின் கேள்வி கணைகளுக்கு பதில் அளித்தனர், முதலாவதாக அதிபர் ஜோ பைடன் பேசினார்.

அப்போது ரஷ்ய அதிபர் புடின் ஆரம்பம் முதலே உக்ரைன் போர் தொடர்பாக பல தவறுகளை பெய்துவிட்டார் அவரது கணிப்புகள் தற்போது தவறாகி உள்ளன உக்ரைனை வீழ்த்துவது என்பது இனி ஒரு போதும் நடைபெறவில்லை.

ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக உள்ளேன் ஆனால் அதற்கு முதலில் அவர் போரை நிறுத்த தயாராக வேண்டும் நான் உக்ரைன் மற்றும் நேட்டோ தலைவர்களுடன் பேசிவிட்டு புடினுடன் நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார்.

ஃபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் பேசும் போது ரஷ்ய அதிபர் புடினுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் சுமுகமான முறையில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும் அதே நேரத்தில் உக்ரைனியர்களுக்கு விருப்பமில்லாத ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று கொள்ள வற்புறுத்தாமல் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

இரு தலைவர்களும் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும் எனவும் அதிபர் செலன்ஸ்கி தலைமையில் உக்ரைன் ரஷ்யாவை மிகவும் அற்புதமான முறையில் வலிமையுடன் எதிர்த்து வருவதாகவும் கூறியது கூடுதல் தகவல் ஆகும்.