2025க்கு பிறகு இந்திய தயாரிப்பு ஏவுகணைகளை பெறும் ரஃபேல் போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • December 18, 2022
  • Comments Off on 2025க்கு பிறகு இந்திய தயாரிப்பு ஏவுகணைகளை பெறும் ரஃபேல் போர் விமானங்கள் !!

சமீபத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BDL Bharat Dynamics limited பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு உள்ளது இதன்மூலம் எதிர்காலத்தில் ரஃபேல் போர் விமானங்களில் இந்திய தயாரிப்பு ஆயுதங்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது.

குறிப்பாக இந்தியா உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த ASTRA BVRAAM ரக தொலைதூர வான் இலக்கு ஏவுகணைகளை இந்திய ரஃபேல் விமானங்களில் இணைக்க முடியும், இதற்கு இந்திய விமானப்படை மற்றும் BDL நிறுவனத்திற்கு டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து Source Code தேவைப்படுகிறது.

இதனையடுத்து ஏவுகணையுடன் விமானத்தின் தாக்குதல் கட்டுபாட்டு ரேடார் தொடர்பு கொள்ளும் விதமாக புதிய மென்பொருளை உருவாக்கி சோதனை செய்ய வேண்டும்.

இதற்கான முழு உரிமத்தையும் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் இப்படி ஒவ்வொரு ஆயுதத்திற்கும் அனுமதி பெற வேண்டும் ஆகவே இது மிகவும் நீளமான அதிக காலம் பிடிக்கும் செயல்பாடாகும், இதன் காரணமாகவே அஸ்திரா ஏவுகணை வருகிற 2025ஆம் ஆண்டிற்கு முன் இணைக்கப்படாது என கூறப்படுகிறது.

தற்போது ரஃபேல் போர் விமானங்களில் Meteor தொலைதூர வான் இலக்கு ஏவுகணைகள் மற்றும் MICA தொலைதூர வான் இலக்கு ஏவுகணைகள் உள்ளன ஆனால் அஸ்திரா இதைவிட மேலான ஆயுதம் என்பது குறிப்பிடத்தக்கது.