உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் !!
பாகிஸ்தான் உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் அதற்கு கைமாறாக உக்ரைன் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வரும் பழைய Mi-17 ஹெலிகாப்டர்களை மேம்படுத்த உதவ ஒப்பு கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் உக்ரைனுக்கு கடல் மார்க்கமாக கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றின் மூலமாக மோர்ட்டார் குண்டுகள், பிரங்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவற்றை அனுப்பி வைக்க உள்ளதாகவும்
இந்த பணியை இஸ்லாமாபாத் நகரில் இயங்கி வரும் DMI Associates எனும் நிறுவனம் கிழக்கு ஐரோப்பிய ஆயுத நிறுவனங்கள் மற்றும் உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து செயல்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகள் புதிதல்ல ஏற்கனவே 320 T-80UD ரக டாங்கிகளை உக்ரைனிடமிருந்து வாங்கியது, சில மாதங்கள் முன்னர் பிரிட்டன் விமானப்படை மூலமாக ஆயுதங்களை அனுப்பியது என பல சம்பவங்களை உதாரணமாக குறிப்பிடலாம்.