கூட்டாக நக்சல்களை ஒழிக்க திட்டமிடும் சட்டீஸ்கர் ஒடிசா மாநில காவல்துறைகள் !!

  • Tamil Defense
  • December 7, 2022
  • Comments Off on கூட்டாக நக்சல்களை ஒழிக்க திட்டமிடும் சட்டீஸ்கர் ஒடிசா மாநில காவல்துறைகள் !!

சமீபத்தில் ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநில காவல்துறை டிஜிபிக்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள் இரு மாநில எல்லையோர பகுதிகளை சேர்ந்த டிஐஜிக்கள், ஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர், இவர்கள் அனைவரும் கூட்டாக நக்சல்களை ஒழிப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

ஒடிசா மாநில டிஜிபி எஸ் கே பன்சால் செய்தியாளர்களிடம் பேசிய போது இரு மாநிலங்களும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன, ஆகவே இரு மாநிலங்களும் இணைந்து இன்னும் சிறப்பான முறையில் நக்சல்களை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

மேலும் மூத்த அதிகாரிகள் பேசுகையில் விரைவில் இரு மாநில தலைமை செயலாளர்களும் சந்தித்து இரு மாநில எல்லை பகுதிகளில் மேம்பாட்டு திட்டங்களை கூட்டாக அமல்படுத்துவதை பற்றி கலந்தாலோசிக்க உள்ளதாகவும் கூறினர்.