1 min read
தென்கொரிய எல்லைக்குள் ட்ரோன்களை ஏவிய வடகொரியா
தென் கொரிய எல்லைக்குள் வடகொரியா தனது ட்ரோன்களை ஏவியதை அடுத்து தென் கொரியா போர்விமானங்களை ஏவியதோடு ட்ரோன்களை சுட்டு வடகொரியாவை எச்சரித்துள்ளது.
2017க்கு பிறகு தற்போது தான் வடகொரியாவின் ட்ரோன்கள் தென் கொரியாவிற்குள் நுழைந்துள்ளது.தென் கொரியா இந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதா அல்லது அந்த ட்ரோன்கள் விபத்துக்குள்ளானதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்கத் தயாரிப்பு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை புகைப்படம் எடுக்க தென் கொரியாவிற்குள் இந்த ட்ரோன்கள் நுழைந்ததாக கூறப்படுகிறது.