நூற்றுக்கணக்கான பிரங்கிகளை சுட்டு வடகொரியா அட்டுழியம் !!

  • Tamil Defense
  • December 6, 2022
  • Comments Off on நூற்றுக்கணக்கான பிரங்கிகளை சுட்டு வடகொரியா அட்டுழியம் !!

வடகொரியா சமீபத்தில் நூற்றுக்கணக்கான பிரங்கிகளை சுட்டு ராணுவ பயிற்சி நடத்தி கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதட்டம் ஏற்படும் வகையில் அட்டுழியம் செய்துள்ளது.

அதாவது இன்று காலை வடகொரிய ராணுவம் தென்கொரியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு அருகே சுமார் 130 பிரங்கி குண்டுகளை சுட்டுள்ளது, இவற்றில் சில இருநாட்டுக்கும் இடையேயான பகுதிகளிலும் விழுந்துள்ளன.

இதையடுத்து தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வடகொரியாவுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியதாகவும், இந்த சம்பவம் 2018ஆம் ஆண்டு இரு நாடுகளும் பதட்டத்தை குறைக்க செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் கூறி உள்ளது.

வட கொரியா சமீப காலமாக தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்வது, போர் விமானங்களை எல்லைக்கு மிக அருகே அனுப்புவது, ராணுவ பயிற்சிகளை எல்லைக்கு அருகே மேற்கொள்வது, பிரங்கி பயிற்சிகளை மேற்கொள்வது என பிரச்சினை செய்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.