புயல் எச்சரிக்கை : தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை தயார்நிலை !!

  • Tamil Defense
  • December 7, 2022
  • Comments Off on புயல் எச்சரிக்கை : தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை தயார்நிலை !!

வங்க கடல் பகுதியில் உருவாகி வரும் மாண்டூஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆந்திர பிரதேசம், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கடற்கரை பகுதிகளில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை தயார்நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடவே இந்திய தரைப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய விமானப்படை ஆகியவை தங்களது ஹெலிகாப்டர்கள், மீட்பு தளவாடங்களுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மாண்டூஸ் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 900 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 840 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாண்டூஸ் புயல் நாளை காலை கரையை கடக்கும் எனவும் தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.