1000 முறை சோதனை செய்யப்பட உள்ளகடற்படை இரட்டை என்ஜின் விமானம் !!

  • Tamil Defense
  • December 24, 2022
  • Comments Off on 1000 முறை சோதனை செய்யப்பட உள்ளகடற்படை இரட்டை என்ஜின் விமானம் !!

இந்தியாவின் புதிய கடற்படை இரட்டை என்ஜின் போர் விமானமானது தற்போது முதற்கட்ட வடிவமைப்பு சீராய்வில் உள்ளது அது முடிவு பெற்றதும் CCS Cabinet Committee on Security பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த ஒப்புதலை பெற்றதும் ADA Aeronautical Development Agency வானூர்தி மேம்பாட்டு முகமை மத்திய அரசிடம் இருந்து சுமார் 13000 கோடி ரூபாய் நிதியாக பெற்று முதல்கட்டமாக 4 விமானங்களை தயாரித்து பல்வேறு சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய கடற்படை மற்றும் வானூர்தி மேம்பாட்டு முகமை ஆகியவை இணைந்து தயாரிப்பு காலத்தை 5 வருடங்களாக நிர்ணயம் செய்துள்ளன, முதல் விமானம் 2027ஆம் ஆண்டு பறக்கும் இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் சுமார் 1000 முறை விமானங்கள் சோதிக்கப்பட உள்ளன.

இதில் குறிப்பாக கடைசி இரண்டு விமானங்கள் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இரண்டு ஆண்டு காலத்திற்கு 80 -120 முறை பல்வேறு ஆயுதங்கள் மற்றும் பல்வேறு வகையான எரிபொருள்களுடன் சோதனை செய்யப்பட உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.