உக்ரைன் நேட்டோவில் இணைவதில் கவனம் செலுத்த வேண்டாம்- நேட்டோ பொது செயலாளர் !!

  • Tamil Defense
  • December 6, 2022
  • Comments Off on உக்ரைன் நேட்டோவில் இணைவதில் கவனம் செலுத்த வேண்டாம்- நேட்டோ பொது செயலாளர் !!

NATO North Atlantic Treaty Organization நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் உக்ரைன் நேட்டோவில் இணைவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தனது இறையாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தனித்து இறையாண்மை கொண்ட நாடாக இருந்து கொண்டே ரஷ்யாவை எதிர்ப்பதில் உக்ரைன் கவனம் செலுத்த வேண்டும் எனவும், ஆகவே நேட்டோவில் இணையும் எண்ணத்தை உக்ரைன் கைவிட வேண்டும் எனவும் பொருள்படும் அர்த்தத்தில் தனது கருத்தை வெளிபடுத்தி உள்ளார்.

அதே நேரத்தில் உக்ரைனுக்கு ராணுவம் அரசியல் பொருளாதாரம் மனிதாபிமான உதவிகள் என எதுவானாலும் ஆதரவளிக்க வேண்டும் அந்த வகையில் உக்ரைனுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் பாதுக்காக்க முடியும் என கூறியுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு ஒரு முறை சமீபத்தில் நான்கு உக்ரைனிய பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்ட பிறகு ஒரு முறை என உக்ரைன் இரண்டு முறை நேட்டோவில் இணைய விண்ணபித்தது குறிப்பிடத்தக்கது.