அமெரிக்க போர் விமானமான F-15 EX அந்நாட்டை சேர்ந்த போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது, தற்போது இந்த போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க BOEING நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது அதற்காக இந்திய தனியார் துறை நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் Mahindra Defence Systems (MDS) Limited நிறுவனத்தை கூட்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது, இந்த நடவடிக்கை இந்திய விமானப்படையின் 114 போர் விமானங்கள் வாங்குவதற்கான MRFA திட்டத்தை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த MRFA திட்டத்திற்காக போயிங் நிறுவனம் தனது F/A – 18 Super Hornet போர் விமானத்தை தர முன்வந்த நிலையில் அமெரிக்க அரசு கடந்த ஜனவரி 2021ஆம் ஆண்டு F – 15EX Eagle 2 போர் விமானத்தை விற்க வழங்கிய அனுமதியை அடுத்து F/A -18 விமானத்தை பின்விலக்கி கொண்டது.
அடுத்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் பெங்களூர் நகரில் நடைபெற உள்ள ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் போது போயிங் மற்றும் மஹிந்திரா இடையே இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க விமானப்படையில் F -15 முக்கிய போர் விமானமாகும், அந்த குடும்பத்திலேயே மிகவும் அதிநவீமானதும் கூட இதனால் அதிக ஆயுதங்களை சுமந்து சென்று எந்த கால நிலையிலும் தாக்குதல் நடத்த முடியும், F -35 போர் விமானத்திற்கு பேரூதவியாக களத்தில் செயல்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.