வருகிற 2026ஆம் ஆண்டு வாக்கில் இந்திய கடற்படையிடம் நான்கு அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
அந்த வகையில் இரண்டாவது கப்பல் அடுத்த ஆண்டும், பிறகு மூன்றாவது மற்றும் நான்காவது நீர்மூழ்கி கப்பல்கள் 2026ஆம் ஆண்டு வாக்கில் படையில் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு அடுத்த கட்டமாக 2027ஆம் ஆண்டு இந்தியாவின் சுதேசி மூன்றாவது தலைமுறை அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு நிலையை அடைய உள்ளது.
இந்த S5 ரக நீர்மூழ்கியின் பணிகள் கடந்த 2015ஆமா ஆண்டே துவங்கிய நிலையில் தற்போது பல்வேறு வடிவம் சார்ந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.
இந்த 13,000 டன்கள் எடை கொண்ட ராட்சத நீர்மூழ்கி கப்பல்களில் சுமார் 190 மெகாவாட சக்தியை உற்பத்தி செய்யும் நீரழுத்த அணு உலை பொருத்தப்படும் இந்த பணிகளை பாபா அணு ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.