மேலும் காலதாமதம் ஆகும் இந்திய சுதேசி டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல் திட்டம் !!

இந்திய கடற்படைக்காக 6 அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு திட்டமிட்டு நீண்ட காலமாகவே அது சார்ந்த முயற்சிகள் நடைபெறுவதும் தோல்வி அடைவதுமாகவே உள்ளன.

இந்த நிலையில் மேலும் இந்த திட்டம் கால தாமதம் ஆகும் வகையில் ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது, அதாவது இதுவரை எந்த ஒரு நிறுவனமும் இந்த திட்டத்தில் தங்களது ஆர்வத்தை வெளிபடுத்தவில்லை.

ஆகவே இந்த ப்ராஜெக்ட் 75ஐ P-75I Project 75 India திட்டத்திற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இருந்து ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை பின்வாங்கியுள்ள நிலையில் தற்போது தென்கொரியா மற்றும் ஜெர்மனி மட்டுமே போட்டியில் உள்ளன.

இந்திய கடற்படையின் கடுமையான நிபந்தனைகளுக்கு ஏற்ற ஒரு நீர்மூழ்கி கப்பல் உள்ள நிலையில் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை பற்றிய கவலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.