சத்தமின்றி அதிவேக முன்னேற்றம் கண்டு வரும் இந்திய அணுசக்தி நீர்மூழ்கி திட்டம் !!
இந்தியாவின் சுதேசி அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கட்டுமான திட்டம் அதிக சத்தமில்லாமல் மிகவும் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது அந்த வகையில் விரைவில் ஒரு கப்பல் படையில் இணைய உள்ளது மற்றொன்று கடலில் இறக்கப்பட உள்ளது.
INS ARIGHAT அரிகாட் எனப்படும் அந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலானது 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்திய கடற்படையில் இணைய உள்ளது, இரண்டாவது அரிஹந்த் ரக நீர்மூழ்கி கப்பலான இது இந்தியாவின் அணு ஆயுத தாக்குதல் திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரிகாட் நீர்மூழ்கி கப்பலானது INS ARIHANT அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை போன்றே 6000 டன்கள் எடை மற்றும் அதே அளவு நீளம் அகலம் விட்டம் ஆகியவற்றை கொண்டிருந்தாலும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை விடவும் பன்மடங்கு அதிநவீனமானதாகும் காரணம் பல்வேறு அதிநவீன மற்றும் புத்தம்புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றை விட அளவில் பெரியதும் பன்மடங்கு அதிநவீனமானதுமான S4 ரக நீர்மூழ்கி கப்பல் தற்போது விசாகப்பட்டினத்தில் கட்டுமானத்தில் உள்ளது அடுத்த ஆண்டு இறுதி வாக்கில் கடலில் இறக்கப்பட தயாராகும் இதில் அதன்பிறகு மின்னனு, சோனார், ஆயுத கட்டுபாட்டு போன்ற அமைப்புகள் மற்றும் கருவிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் இந்த வகை கப்பல்களால் அதிக தூரம் பாயும் K-5 அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்க முடியும்.
இந்த இரண்டு வகை அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை கட்டி முடிக்கும் நேரத்தில் இந்தியா மிகப்பெரிய அதாவது சுமார் 13,000 டன்கள் எடை கொண்ட அணுசக்தியால் இயங்கும் S5 ரக அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைக்கும் நிபுணத்துவத்தை பெறும் என்றால் மிகையாகாது.