105mm உயர் அழுத்த துப்பாக்கியை பெறும் இலகுரக டாங்கி !!

இந்தியா உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க வடிவமைத்து உருவாக்கி வரும் ஸோராவர் இலகுரக டாங்கியானது ZORAWAR Light Tank ஒரு 105 மில்லிமீட்டர் உயரழுத்த துப்பாக்கியை பெற உள்ளது.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த உலக பிரசத்தி பெற்ற தனியார் நிறுவனமான John Cockerill ஜாண் காக்கரில் தயாரிக்கும் துப்பாக்கியை தான் ஸோராவர் இலகுரக டாங்கியில் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனத்தின் 105 மில்லிமீட்டர் துப்பாக்கிகளை இலகுரக மற்றும் நடுத்தர டாங்கிகளில் பயன்படுத்தி கொள்ள முடியும், தென்கொரியாவின் புத்தம்புதிய இலகுரக டாங்கியான K21 – 105 இதே துப்பாக்கியை தான் பயன்படுத்துகிறது.

இந்த துப்பாக்கியானது அனைத்து வகையான நேட்டோ NATO தர குண்டுகளை சுட முடியும் மேலும் நமது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வரும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையையும் இதனால் சுட முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.