விரைவில் சுதேசி பயிற்சி போர் விமானம் அறிமுகம் !!
1 min read

விரைவில் சுதேசி பயிற்சி போர் விமானம் அறிமுகம் !!

HAL Hindustan Aeronautics Limited நிறுவனமானது இந்திய விமானப்படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்து வரும் HLFT – 42 ரக பயிற்சி போர் விமானத்தின் மாதிரியை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விமானத்தில் சிறிய காற்று உள்வாங்கி அமைப்புகள் உள்ளன இவை ஏற்கனவே ஜெர்மானிய வானூர்தி பொறியாளரான கர்ட் டேங்க வழிகாட்டுதலில் வடிவமைக்கப்பட்ட HF-24 Marut மாரூட் போர் விமானத்தின் காற்று உள்வாங்கி அமைப்புகளை போன்றே காணப்படுகிறது.

விமானத்தின் முன்பகுதி சற்றே நீளமாக உள்ளது இதன் காரணமாக இரு விமானிகள் பயணிக்க ஏதுவான இருக்கைகளை அமைக்க முடியும் மேலும் சிறிய தாக்குதல் கட்டுபாட்டு ரேடாரையும் அமைக்க முடியும், கூடுதலாக அதிநவீன Exhaust அமைப்பும் காணப்படுகிறது.

இந்த HLFT – 42 பயிற்சி போர் விமானமானது ஒற்றை என்ஜினை கொண்டிருக்கும் அனேகமாக இது அமெரிக்க GE F404 என்ஜின் அல்லது சுதேசி காவேரி என்ஜினை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும், காலபோக்கில் தென்கொரியாவின் T-50 மற்றும் சீனாவின் JL -10 போன்ற பயிற்சி விமானங்களுக்கு போட்டியாகவும் களமிறக்கப்படும் என கூறப்படுவது சிறப்பாகும்.