இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் வரும் அரசு பொதுத்துறை நிறுவனமான AVNL Armoured Vehicles Nigam Limited FICV Futuristic Infantry Combat Vehicle எனப்படும் எதிர்கால காலாட்படை சண்டை வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனேகமாக வருகிற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியின் போது இது அறிமுகம் செய்யப்படும் எனவும் இது ஏற்கனவே வந்த FICV டிசைன்களை போல ரஷ்ய BMP வாகனத்தை அடிப்படையாக கொண்டிராமல் புத்தம் புதிதாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த வாகனம் பற்றி பேசிய AVNL நிறுவன அதிகாரி ஒருவர் இந்த புதிய FICV வாகனத்தில் சுமார் 600 HP அதாவது 600 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் இருக்கும் எனவும், Automatic Transmission தானியங்கி கியர், STANAG Level 4 பாதுகாப்பு மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும் APS Active Protection System ஆகியவை இருக்கும் என கூறினார்.
சுமார் 23,000 கிலோ எடை கொண்ட இந்த வாகனம், 11 வீரர்களை அவர்களின் சுமையுடன் சுமக்கும், மேலும் இதில் மிதவை குண்டுகள், ரிமோட் மூலமாக இயக்கப்படும் ஆயுத அமைப்பு, டாங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ஒரு 30 மில்லிமீட்டர் கனரக துப்பாக்கி ஆகியவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.