இலகுரக குண்டு துளைக்கா வாகனம் வாங்க டென்டர் விட்ட தரைப்படை !!

  • Tamil Defense
  • December 20, 2022
  • Comments Off on இலகுரக குண்டு துளைக்கா வாகனம் வாங்க டென்டர் விட்ட தரைப்படை !!

இந்திய தரைப்படை சுமார் 375 இலகுரக குண்டு துளைக்கா வாகனங்களை வாங்க விரும்புகிறது இதற்காக விரைவான கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக டென்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

QRT Quick Reaction Teams எனப்படும் அதி விரைவு படையணி, கான்வாய் பாதுகாப்பு, சோதனை சாவடிகள் அமைப்பு,பயங்கரவாத எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்த வாகனங்கள் பேரூதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இது 4×4 வாகனமாக இருக்க வேண்டும், ஒட்டுநர், துணை ஒட்டுநர் மற்றும் 4 வீரர்கள் என ஆறு பேர் மற்றும் அவர்களின் சண்டை கருவிகள் என அனைத்தையும் சுமந்து பயணிக்கும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்க வேண்டும் அப்படி 600 கிலோ எடையை சுமக்க வேண்டும், 4500 கிலோ எடைக்கு அதிகமாக இருக்க கூடாது சமவெளிகளில் தொடர்ந்து 350 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் என்பதும்

7.62mm துப்பாக்கி குண்டுகளை சுடக்கூடிய AK-47 மற்றும் SLR ரக துப்பாக்கிகளின் தோட்டாக்கள், 5.56mm தோட்டாக்களை சுடக்கூடிய INSAS துப்பாக்கியின் தோட்டாக்களையும் தாங்கும் விதமாகவும், ஒரே நேரத்தில் வாகனத்திற்கு அடியில் இரண்டு நம்பர்36 கையெறி குண்டுகள் வெடித்தாலும் தாங்கும் திறனை கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.