
இந்தியா NOTAM Notice To Airmen எனப்படும் வான்வழி பறத்தல் நடவடிக்கை தொடர்பான எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, இது இந்தியா விரைவில் சோதனை செய்ய உள்ள அணு ஆயுத ஏவுகணை சார்ந்ததாகும்.
வருகிற டிசம்பர் மாதம் 15 – 16 ஆகிய தேதிகளில் ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து வங்க கடல் துவங்கி இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நீளும் சுமார் 5400 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியில் இந்த சோதனை நடைபெற உள்ளது.
இந்த சோதனையின் போது அக்னி Agni – 5 அல்லது K – 6 SLBM எனப்படும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணைகளில் ஏதேனும் ஒன்று சோதனை செய்யப்படலாம் எனவும் ஒருவேளை MIRV Multiple Independent Re-entry Vehicle எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டுகளை வைத்து சோதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் தென் கோடியில் இருந்து கூட சீனாவின் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட அக்னி -5 மற்றும் கே-6 ஏவுகணைகள் மட்டுமே இந்தியாவிடம் உள்ள 5400 – 5500 கிலோமீட்டர் தொலைவு வரை பாயக்கூடிய ஏவுகணைகள் என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்த தகவலாகும்.