இந்திய சிங்கப்பூர் ராணுவ கூட்டு பயிற்சிகள் நிறைவு !!
கடந்த மாதம் 13ஆம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் தேவலாலி பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் தரைப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சிகள் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் நவம்பர் 20 அன்று நிறைவு பெற்றுள்ளன.
இந்த கூட்டு பயிற்சிக்கு அக்னி வீரர் AGNI WARRIOR என பெயர் சூட்டப்பட்ட நிலையில் இது தொடர்ந்து 12ஆவது ஆண்டாக நடைபெற்றது, இந்த பயிற்சிகளின் போது புதிய தளவாடங்களை பயன்படுத்துவது, இணைந்து தாக்குதல் திட்டங்களை வகுப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
இது தவிர இரண்டு நாட்டு படையினரும் கணிணி சார்ந்த அமைப்புகளை ஆர்ட்டில்லரி ARTILLERY அதாவது பிரங்கி தாக்குதல் திட்டங்களில் பயன்படுத்தினர், இந்த பயிற்சிகளை இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வாங் வெய் கியுன் மற்றும் பிரங்கி பயிற்சி பள்ள தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரிமோஹன் ஐயர் ஆகியோர் பார்வையிட்டனர்.