அருணாச்சல் எல்லையில் சீனாவின் வான் நடவடிக்கை சுகோய் விமானங்களை அனுப்பிய இந்தியா !!

  • Tamil Defense
  • December 13, 2022
  • Comments Off on அருணாச்சல் எல்லையில் சீனாவின் வான் நடவடிக்கை சுகோய் விமானங்களை அனுப்பிய இந்தியா !!

கடந்த சில வாரங்களில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன படைகள் இந்திய எல்லையோரம் பல முறை அத்துமீறிய வான் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா 2, 3 முறை போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களில் நடைபெற்ற மோதலுக்கு முன்னதாக இந்திய படைகளும் எல்லையோரம் அதிகளவில் நகரத்தப்பட்டதாகவும் தற்போது கூறப்படுகிறது, இதனையடுத்து தான் மோதலும் நயைபெற்றுள்ளது.

சீன ராணுவத்தின் ஆளில்லா வானூர்திகள் அதாவது ட்ரோன்கள் இந்திய எல்லையோரம் தீவிரமாக இயங்கிய நிலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI சுகோய்-30 போர் விமானங்கள் பதிலடி கொடுக்க அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அருகேயுள்ள அசாம் மாநிலத்தின் தேஸ்பூர் மற்றும் சாபுவா ஆகிய படை தளங்களில் இந்திய விமானப்படை சுகோய்-30 விமானங்களும் மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டா தளத்தில் சுகோய்-30 மற்றும் ஹஷிமாரா படைத்தளத்தில் ரஃபேல் போர் விமானங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.