ஏவுகணை கண்காணிப்பு கப்பல்களை அதிகபடுத்த இந்தியா திட்டம் !!

  • Tamil Defense
  • December 18, 2022
  • Comments Off on ஏவுகணை கண்காணிப்பு கப்பல்களை அதிகபடுத்த இந்தியா திட்டம் !!

கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா அதிக சத்தமில்லாமல் INS Dhruv த்ரூவ் எனும் ஏவுகணை கண்காணிப்பு கப்பலை தயாராக்கியது, இந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் NTRO National Technical Research Organisation எனப்படும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை வடிவமைத்த நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் HSL Hindustan Shipyards Limited கட்டமைத்தது.

இது இந்திய கடற்படையின் முதலாவது ஏவுகணை கண்காணிப்பு கப்பலாகும் ஆனால் வருங்காலத்தில் இந்தியா இத்தகைய கூடுதல் கப்பல்களை படையில் சேர்க்க திட்டமிட்டு உள்ளது, இந்தோ பசிஃபிக் பிராந்தியம் குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் தனது கழுகு பார்வையை செலுத்தும் விதமாக இந்தியா இத்தகைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த வகை கப்பல்களை கொண்டு ஏவுகணைகள் செயற்கைகோள்கள் கடலடி பகுதிகள் போன்றவற்றை ஆய்வு செய்ய முடியும் இதன் மூலம் நீர்மூழ்கி கப்பல் நடவடிக்கைகளுக்கு பெரும் உத்வேகம் கிடைக்கும் என்றால் மிகையாகாது.

விரைவில் INS DHRUV த்ரூவ் கப்பலை போன்றதொரு கப்பலை கட்டமைத்து படையில் இணைக்க அனுமதி அளிக்கப்படலாம் என நம்பத்தகுந்த பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.