4.2 கிலோ நியூட்டன் வானூர்தி என்ஜினை உருவாக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • December 22, 2022
  • Comments Off on 4.2 கிலோ நியூட்டன் வானூர்தி என்ஜினை உருவாக்கும் இந்தியா !!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் ஒரு 4.2 கிலோ நியூட்டன் திறன் கொண்ட வானூர்தி என்ஜின் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஏற்கனவே உள்ள PTAE – 7 டர்போ ஜெட் என்ஜினின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும் இந்த என்ஜினை ADE Aeronautical Development Eastblishment அதாவது வானூர்தி மேம்பாட்டு முகமை உருவாக்கி வரும் ரிமோட் கன்ட்ரோல் இலக்கு வானூர்தியில் பயன்படுத்த உள்ளனர்.

1980களில் உருவாக்கப்பட்ட PTAE – 7 என்ஜின் 65 கிலோ எடை கொண்டதாகும், மேலும் இது 3.43 கிலோ நியூட்டன் ஆற்றலை மட்டுமே வெளிபடுத்தும் திறன் கொண்டது, ஆனால் இந்த மேம்படுத்தப்பட்ட என்ஜினில் புதிய டர்பைன் ப்ளேடுகள், கடினமான அழுத்தமேற்றும் அமைப்புகள், FADEC அமைப்பு ஆகியவை இருக்கும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதே என்ஜினை HAL ஒரு வேளை தனது CATS Combat Air Teaming System அமைப்பின் Warrior ஆளில்லா விமானத்தில் பயன்படுத்தலாம் என் தகவல்கள் தெரிவிக்கின்றன.