புதிய வான் இலக்கு ஏவுகணையை உருவாக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • December 22, 2022
  • Comments Off on புதிய வான் இலக்கு ஏவுகணையை உருவாக்கும் இந்தியா !!

இந்தியாவின் DRDO Defence Research and Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புத்தம்புதிய வான் இலக்கு ஏவுகணை ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த புதிய ஏவுகணை ஏற்கனவே உள்ள அஸ்திரா Astra Mk2 ஏவுகணையை விட அதிக தொலைவு பாயும் எனவும் தற்போது உருவாக்கப்பட்டு வரும் அஸ்திரா Astra Mk3 ஏவுகணை பாயக்கூடிய அதே தொலைவுக்கு செல்லும் எனவும் கூறப்படுகிறது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதனால் 280 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாய முடியும் அதே நேரத்தில் திட எரிபொருளை பயன்படுத்துவதால் அஸ்திரா மார்க்-3 ஏவுகணையை விடவும் குறைவான செலவில் தயாரிக்க முடியும் என்பதாகும்.

இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது ஒரு புதிய திட எரிபொருள் மோட்டார் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.