முதல்முறையாக ஜப்பான் சென்று போர் பயிற்சி மேற்கொள்ள உள்ள இந்திய விமானப்படை !!
1 min read

முதல்முறையாக ஜப்பான் சென்று போர் பயிற்சி மேற்கொள்ள உள்ள இந்திய விமானப்படை !!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்றில் முதல்முறையாக இந்திய விமானப்படை ஜப்பான் சென்று போர் பயிற்சிகளை அந்நாட்டு விமானப்படை உடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது.

இதற்கான அறிவிப்பை ஜப்பான் தற்காப்பு விமானப்படை வெளியிட்டுள்ளது அந்த அறிவிக்கையில் ஜப்பான் தலைநகர் டோக்யோ அருகில் ஜனவரி 16 முதல் 26 வரை இந்த பயிற்சிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இபராக்கி மாகாணத்தில் உள்ள ஹையாகுரி விமானப்படை தளத்தில் நடைபெறும் இப்பயிற்யில் ஜப்பான் சார்பில் நான்கு Mitsubishi மிட்சூபிஷி F-2 மற்றும் நான்கு F-15 Eagle போர் விமானங்கள் ஆகியவையும் இந்தியா சார்பில் நான்கு Sukhoi Su-30 MKI மற்றும் இதர விமானங்கள் கலந்து கொள்கின்றன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு பிறகு ஜப்பான் சென்று வான்போர் பயிற்சிகளில் ஈடுபடும் ஐந்தாவது நாடு எனும் சிறப்பையும் இந்தியா பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட மிட்சூபிஷி F-2 போர்விமானமானது அமெரிக்காவின் F-16 போர் விமானத்தை தொழில்நுட்ப பரிமாற்ற உரிமம் பெற்று தயாரிக்கப்படும் ஜப்பானிய ரகம் என்பதும் ஆனால் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளது என்பதும் இதன் கதை நமது சு-30 எம்.கே.ஐ க்கு ஒப்பானது என்றால் மிகையாகாது.