கல்வானுக்கு பிறகு மீண்டும் இந்திய சீன படைகள் எல்லையில் மோதல் !!
1 min read

கல்வானுக்கு பிறகு மீண்டும் இந்திய சீன படைகள் எல்லையில் மோதல் !!

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று இந்திய சீன படைகள் கல்வான் மோதலுக்கு பிறகு மீண்டும் எல்லையோரம் மோதி உள்ள தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் செக்டாரில் உள்ள எல்லையோர பகுதியில் இரு நாட்டு வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு உள்ளனர்.

யாங்க்ஸே எனும் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் முதலில் சீன வீரர்கள் 9ஆம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்கி உள்ளனர் இதில் இந்திய வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.

இதனையடுத்து இந்திய படையினர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளுக்கு இடைபட்ட இரவில் எல்லை தாண்டி சென்று பதிலடி கொடுத்ததாகவும் முக்கிய பகுதிகளை பிடித்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன படையினர் முதலில் வந்த போது சுமார் 300-600 வீரர்கள் இருந்ததாகவும் அப்போது இந்திய படையினர் கொடுத்த பதிலடியில் சீன வீரர்கள் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.