பிரத்தியேக நடுத்தர பல திறன் ஹெலிகாப்டர் தயாரிக்க கடலோர காவல்படை HAL பேச்சுவார்த்தை !!

  • Tamil Defense
  • December 2, 2022
  • Comments Off on பிரத்தியேக நடுத்தர பல திறன் ஹெலிகாப்டர் தயாரிக்க கடலோர காவல்படை HAL பேச்சுவார்த்தை !!

இந்திய கடலோர காவல் படை மற்றும் HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை ஒரு பிரத்தியேக நடுத்தர பல திறன் ஹெலிகாப்டரை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ஏற்கனவே இந்திய கடற்படை, இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியா சொந்தமாக MMRH Medium Multi Role Helicopter எனப்படும் நடுத்தர பல திறன் ஹெலிகாப்டரை தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ளது.

இந்திய கடலோர காவல் படைக்கும் 13 டன் எடையிலான இந்த வகை ஹெலிகாப்டர்கள் கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவைப்படுகிறது, ஆகவே இத்தகைய 14 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான டென்டர் ஒன்றை வெளியிட்டது.

இதற்கு ரஷ்யாவின் காமோவ் Kamov நிறுவனம் மற்றும் AIRBUS ஏர்பஸ் ஆகியவை பதிலளித்தன, அந்த வகையில் காமோவ் நிறுவனம் தனது KA 32A11M மற்றும் ஏர்பஸ் தனது H225M ஹெலிகாப்டர்களை தர முன்வந்த நிலையில் ரஷ்யா பின்வாங்கியது பின்னர் திட்டமும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த முயற்சியில் இந்திய கடலோர காவல்படை இறங்கியுள்ளது ஆனால் இந்த முறை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யவும் அதற்கு HAL நிறுவனத்தின் MMRH ஹெலிகாப்டரை தேர்வு செய்துள்ளது மேலும் இதை தனது தேவைக்கேற்ப பிரத்தியேகமாக தயாரித்து தர பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.