கடுமையான நிபந்தனைகளை தளர்த்தினால் நீர்மூழ்கி கப்பல் டென்டரில் பங்கெடுப்போம் ஜெர்மனி !!
1 min read

கடுமையான நிபந்தனைகளை தளர்த்தினால் நீர்மூழ்கி கப்பல் டென்டரில் பங்கெடுப்போம் ஜெர்மனி !!

ஜெர்மனி அரசு இந்தியாவின் P – 75 India திட்டத்தில் அந்நாட்டை சேர்ந்த ThyssenKrupp Marine Systems TKMS நிறுவனத்தை பங்கெடுக்க அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில்

தற்போது இந்தியா இந்த திட்டத்தில் உள்ள மிக கடுமையான நிபந்தனைகளை தளர்த்தினால் இந்த திட்டத்தில் பங்கெடுப்பதை பற்றி ஆலோசிப்போம் என ஜெர்மனி அரசு இந்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

TKMS நிறுவனம் தயாரிக்கும் Type – 214 ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே இந்திய கடற்படையின் நிபந்தனைகளுக்கு ஏற்றதாக உள்ள நிலையில் மேலும் கூடுதலான கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது தான் பிரச்சனையாக உள்ளது.

அதாவது இந்தியாவில் தான் இந்த 6 நீர்மூழ்கி கப்பல்களும் இந்திய நிறுவனம் ஒன்றாலேயே கட்டப்படும் ஆனால் தொழில்நுட்பத்தை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனம் தான் தாமதம் அல்லது தரம் அல்லது கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு பொறுப்பு என்பது தான் விதி.

இதை தான் ஜெர்மனி நேரடியாக கட்டுமானத்திலோ அல்லது குறைந்தபட்சம் மேற்பார்வையில் கூட எங்களுக்கு பங்கு இல்லாத நிலையில் எப்படி எந்த வகையில் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பாக முடியும் என கேள்வி எழுப்பி உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.