பின்தங்கிய ரஃபேல் – மேம்பாட்டு திட்டங்களை அறிவித்த ஃபிரான்ஸ் !!

இந்திய கடற்படைக்கு சுமார் 36 பல திறன் போர் விமானங்கள் வாங்குவதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது, ஆனால் இதில் ஃபிரான்ஸ் நாட்டின் ரஃபேல் நிறுவனம் பின்தங்கி உள்ளது.

இதற்கு காரணமாக கடற்படைக்கான Rafale Marine ரக போர் விமானத்தில் ஒற்றை விமானி வடிவம் மட்டுமே உள்ளதும் இறக்கைகளை மடித்து வைக்க முடியாததும் குறைந்த சுமை திறன் ஆகியவை கூறப்படுகின்றன.

இதனையடுத்து போட்டியில் தோல்வியை தழுவாமல் இருக்க பிரான்ஸ் கடற்படைக்கு தரும் விமானங்களை இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்களை போன்றே நவீனபடுத்தி தரவும் இந்திய ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளை இணைத்து பயன்படுத்த உதவுவதாகவும்

மேலும் வேறு விமானங்களை வாங்கினால் புதிதாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் இதற்கு மிகப்பெரிய அளவில் பணம் தேவைப்படும் எனவும் குறைந்த விலையில் மேலும் மூன்று விமானப்படை வடிவ ரஃபேல் போர் விமானங்களை தர உள்ளதாகவும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இந்திய கடற்படையின் போர் விமான தேர்வுக்கான அனைத்து விதமான சோதனைகளிலும் தற்போது அமெரிக்க Boeing F/A – 18 Super Hornet போர் விமானம் முன்னிலையில் உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்திய கடற்படை இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.