ட்ரக் வழியாக பயணித்த பயங்கரவாதிகள் ; போட்டுத் தள்ளிய வீரர்கள் – நடந்தது என்ன ?
ஜம்முவில் தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக ட்ரக்கில் பயணித்த நான்கு அதிபயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.ஜம்முவின் சித்ர பாலம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பஞ்சாபில் இருந்து காஷ்மீர் வந்த லாரியில் நான்கு பயங்கரவாதிகளும் பதுங்கி இருந்துள்ளனர்.லாரியில் இருந்த ஓட்டுநர் மட்டும் தலைமறைவாகியுள்ளான்.அவனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காஷ்மீர் காவல் துறை கூறியுள்ளது.
சோதனைக்காக லாரியை நிறுத்த முயன்ற போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.பயங்கரவாதிகளிடம் இருந்து ஏழு ஏகே துப்பாக்கிகளும் எம்-16 துப்பாக்கியுமம மற்றும் வெடிபொருள்களும் கைப்பற்றியுள்ளனர்.வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் அடையாளம் இன்னும் காணப்படவில்லை.
ஜனவரி 26 குடியரசு தின கொண்டாட்டம் தொடர்பான பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வந்தன.அப்போது அங்கு வந்த லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுவதை கண்ட அதிவிரைவு படை வீரர்கள் அந்த லாரியை பின்தொடர்ந்துள்ளன.
ஒரு கட்டத்தில் அந்த லாரியை நிறுத்த முயன்ற போது அந்த லாரி டிரைவர் வண்டியை சித்ரா பாலம் அருகே நிறுத்தியுள்ளார்.ஆனால் திடீரென பனிமூட்டத்தை சாதகமாக கொண்டு தப்பியுள்ளான்.இதனை தொடர்ந்து நமது வீரர்கள் லாரியை சோதனையிட முயன்ற போது உள்ளே இருந்து பயங்கரவாதிகள் சுட முயன்றனர்.
சுதாரித்துக் கொண்ட வீரர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து பாலத்தில் மற்ற வாகனங்களை நிறுத்தி விட்டு லாரியை சுட்டு பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.லாரி மொத்தமாக தீப்பற்றி கொண்டது.
தற்போது ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் உயர்மட்ட கூட்டத்தை நடத்தியுள்ளார்.