ATAGS MGS பிரங்கியை மேலும் சோதனை செய்ய திட்டம் !!

  • Tamil Defense
  • December 21, 2022
  • Comments Off on ATAGS MGS பிரங்கியை மேலும் சோதனை செய்ய திட்டம் !!

ATAGS Advanced Towed Artillery Gun எனப்படும் சுதேசி பிரங்கியை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட MGS Mountain Gun System என்ற பிரங்கியை மேலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பாதுகாப்பு கண்காட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிரங்கியானது ஒரு 8×8 TATRA டட்ரா லாரியில் பொருத்தப்பட்ட ATAGS பிரங்கியாகும், ஏற்கனவே இதனுடைய மலைகள் பாலைவனம் போன்ற பகுதிகளில் நகரும் திறன்களை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர்.

தற்போது இதன் தாக்குதல் திறன்களை பரிசோதனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது , இந்த வகை பிரங்கிகள் இந்திய தரைப்படையின் 800 MGS பிரங்கிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.