2035 வாக்கில் 1500 அணு ஆயுதங்களை சீனா வைத்திருக்கும் அமெரிக்க ஆய்வறிக்கை !!

  • Tamil Defense
  • December 4, 2022
  • Comments Off on 2035 வாக்கில் 1500 அணு ஆயுதங்களை சீனா வைத்திருக்கும் அமெரிக்க ஆய்வறிக்கை !!

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் சீனாவின் ராணுவ செயல்திட்டங்களை பற்றிய வருடாந்திர ஆய்வறிக்கையை வெளியிட்டது அதில் சீனாவின் அணு ஆயுத திட்டம் பற்றிய ஆய்வு தகவல்கள் இடம்பெற்றுள்ளன அவை பரபரப்பு மற்றும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அந்த அறிக்கையில் தற்போது சீனாவிடம் 400 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தனது கடல் வான் மற்றும் தரை சார்ந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருவதாகவும் மேலும் இவற்றிற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருவதாகவும்

இதற்காக புளுட்டோனியம் பிரித்து எடுத்து அவற்றை கொண்டு அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் FBR Fast Breeder Reactor எனும் அணு உலைகளை கட்டமைத்து வருகிறது, இதே வேகத்தில் சென்றால் 2035ஆம் ஆண்டு வாக்கில் சீனாவிடம் சுமார் 1500 அணு ஆயுதங்கள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சீனா அணு ஆயுதங்களை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுத தாக்குதல் அமைப்புகளையும் நவீனமயமாக்கி வருவதாகவும் இவற்றை கொண்டு உலக அரங்கில் தனது பலத்தை அதிகரிக்கும் நோக்கில் சீனா செயல்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.