சீன எல்லையோரம் கூட்டு பயிற்சி நிறுத்த முடியாது இந்தியா அமெரிக்கா கூட்டறிக்கை !!

  • Tamil Defense
  • December 4, 2022
  • Comments Off on சீன எல்லையோரம் கூட்டு பயிற்சி நிறுத்த முடியாது இந்தியா அமெரிக்கா கூட்டறிக்கை !!

உத்தராகண்ட் மாநிலம் ஆலியில் நடைபெற்று வரும் இந்திய அமெரிக்க தரைப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சி சீனாவை கடுப்பேற்றி உள்ளது, இந்த பயிற்சிகள் இந்திய சீன இருதரப்பு எல்லையோர அமைதி ஷரத்துகளை மீறியது. ஆகவே நடத்த கூடாது என கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி பதிலடி கொடுத்துள்ளார் அதில் எந்தவொரு மூன்றாவது நாடுக்கும் எங்கள் விவகாரங்களில் தலையிட உரிமையில்லை அதே நேரத்தில் 1993, 1996 ஆண்டுகளில் சீனா தனது அத்துமீறல்களை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசும் சீனாவிடம் இந்தியா மிக முக்கியமான கூட்டாளி மற்றும் நட்பு நாடு எனவும் இந்தியா அமெரிக்கா இடையிலான இருதரப்பு விவகாரங்களில் சீனா தலையிட வேண்டாம் என விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது கூடுதல் சிறப்பு ஆகும்.