இலக்குகளை அடையாத 20 திட்டங்களை வெற்றி என அறிவித்த DRDO : CAG அறிக்கை !!
1 min read

இலக்குகளை அடையாத 20 திட்டங்களை வெற்றி என அறிவித்த DRDO : CAG அறிக்கை !!

இந்திய அரசின் CAG Comptroller & Auditor General எனப்படும் தலைமை கணக்கு தணிக்கையாளர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இலக்குகளை பூர்த்தி செய்யாத 20 திட்டங்கள் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த 20 திட்டங்களும் DRDO Defence Research & Development Organisation எனப்படும் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் செயலாற்றி வரப்படுபவை ஆகும், இவற்றிற்கு சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் ALTAS சோனார், NAGAN ரேடார், MAWS எச்சரிக்கை அமைப்பு போன்றவை அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பல திட்டங்கள் முழுமையாக வெற்றி அடையும் முன்னரே அவற்றிற்கு வெற்றி என சான்றிதழ் அளித்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு DRDO பதில் அளிக்கவில்லை என CAG அறிக்கை கூறுகிறது.