வானூர்தி நடவடிக்கை சோதனைகளில் விக்ராந்த் கப்பல் !!

சமீபத்தில் இந்திய கடற்படையில் இணைந்த உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான விமானந்தாங்கி போர்க்கப்பலான INS VIKRANT விக்ராந்த் தற்போது வான் நடவடிக்கை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளின் போது இந்திய கடற்படையின் போர் விமானங்கள் விக்ராந்த் கப்பலில் இருந்து எந்தளவுக்கு வெற்றிகரமாக இயங்குகின்றன என பார்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பல் தற்போது பராமரிப்பு பணிகளில் உள்ள நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கடற்படையின் போர் விமானிகளில் விமானந்தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்களை இயக்க உள்ளனர்.

இதற்காக விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பல் ஆழ்கடலுக்கு சென்றுள்ளதாகவும் ரஷ்ய தயாரிப்பு Mig – 29K மற்றும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட LCA Navy TEJAS MK1 அதாவது கடற்படைக்கென தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் இந்த சோதனைகளை மேற்கொள்ள உள்ளன.

விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பலில் ஏற்கனவே இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பில் உருவான Barak – 8 LRSAM பராக்-8 தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை, RAN 40L 3D வான் கண்காணிப்பு ரேடார் மற்றும் இந்தியாவின் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து தயாரித்த SHAKTI மின்னனு போர்முறை அமைப்பு ஆகியவை இணைக்கப்பட்டுள்ள நிலையில்,

இனி புதியதாக MRSAM எனப்படும் இடைத்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் MF STAR Multifunction Solid State Active Electronically Scanned Array Radar எனப்படும் அதிநவீன ஏசா ரேடார் ஆகியவை பொருத்தப்பட்டு அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் முழுமையாக தயாராகும் என கூறப்படுகிறது.