
கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதாவது டிசம்பர் 9ஆம் தேதி இரவு இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங் செக்டாரில் எல்லையை கடந்து அத்துமீறி வந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
300 சீன வீரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலைவெறி தாக்குதல் நடத்த முயன்ற போது இந்திய படையினர் நிகழ்த்திய பதில் தாக்குதலில் இந்திய தரப்பை விட சீன தரப்பில் அதிக சேதம் ஏற்ப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறகு இரு தரப்பு அதிகாரிகளும் கொடி சந்திப்பு நடத்தி கலந்தாலோசித்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்ததாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன கூடுதல் தகவல்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.