13,000 உக்ரைன் வீரர்கள் வீரமரணம் உக்ரைன் அதிகாரி !!

  • Tamil Defense
  • December 5, 2022
  • Comments Off on 13,000 உக்ரைன் வீரர்கள் வீரமரணம் உக்ரைன் அதிகாரி !!

உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கியின் ஆலோசகரான மைகாயல்யோ பொடோல்யாக் இதுவரை ரஷ்ய படைகளுடனான சண்டையில் சுமார் 13,000 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உக்ரைன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது அவர் உக்ரைன் ராணுவ தலைமையகம் இதுவரை 10,000 முதல் 13,000 வீரர்கள் வரை வீரமரணம் அடைந்திருக்கலாம் என கணித்துள்ளதாக கூறினார்.

கடந்த ஜூன் மாதம் ஒவ்வொரு நாளும் தலா 100 முதல் 200 உக்ரைன் வீரர்கள் வரை இறப்பதாக மைகாயல்யோ பொடோல்யாக் தெரிவித்திருந்தார், மேலும் அவர் பொது மக்களின் இறப்பு எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

BBC பிபிசி இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என கூறிய நிலையில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அர்சலா வான் டெர் லெயன் இதுவரை 1 லட்சம் உக்ரைன் வீரர்கள் இறந்துள்ளதாகவும் பின்னர் அதை திருத்தி 20,000 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது ஆகும்.