Day: December 7, 2022

ரஷ்யாவில் இருந்து இறக்குமதியை அதிகரித்த அமெரிக்கா !!

December 7, 2022

ரஷ்ய பொருளாதாரத்தை நசுக்கும் எண்ணத்தோடு அமெரிக்கா ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது, மேலும் இந்தியா உட்பட பல உலக நாடுகளை ரஷ்யா உடனான அனைத்து இறக்குமதி தொடர்புகளையும் துண்டிக்க மிரட்டியும் வற்புறுத்தியும் வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வது அதிகரகத்துள்ள செய்தியும் வெளியாகி உள்ளது அதாவது கடந்த ஆண்டு 1947 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இறக்குமதி தற்போது 1959 மில்லியன் டாலர்கள் என உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவுக்கான […]

Read More

கூட்டாக நக்சல்களை ஒழிக்க திட்டமிடும் சட்டீஸ்கர் ஒடிசா மாநில காவல்துறைகள் !!

December 7, 2022

சமீபத்தில் ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநில காவல்துறை டிஜிபிக்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள் இரு மாநில எல்லையோர பகுதிகளை சேர்ந்த டிஐஜிக்கள், ஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர், இவர்கள் அனைவரும் கூட்டாக நக்சல்களை ஒழிப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். ஒடிசா மாநில டிஜிபி எஸ் கே பன்சால் செய்தியாளர்களிடம் […]

Read More

மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல் !!

December 7, 2022

இந்த மாதம் இந்தியா அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு செல்லும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்த உள்ள நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மீண்டும் சீன கண்காணிப்பு கப்பல் நுழைந்துள்ளது. சீன கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 யுவான் வாங் 5 இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளதை அடுத்து இந்திய கடற்படை அந்த கப்பலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாட்டு அரசுகளும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையோ அல்லது கருத்தையோ […]

Read More

புயல் எச்சரிக்கை : தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை தயார்நிலை !!

December 7, 2022

வங்க கடல் பகுதியில் உருவாகி வரும் மாண்டூஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆந்திர பிரதேசம், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கடற்கரை பகுதிகளில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை தயார்நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடவே இந்திய தரைப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய விமானப்படை ஆகியவை தங்களது ஹெலிகாப்டர்கள், மீட்பு தளவாடங்களுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மாண்டூஸ் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 900 […]

Read More