அணு ஆயுதம் தயாரிக்க பாகிஸ்தான் உதவியை நாடிய உக்ரைன் !!

  • Tamil Defense
  • November 2, 2022
  • Comments Off on அணு ஆயுதம் தயாரிக்க பாகிஸ்தான் உதவியை நாடிய உக்ரைன் !!

இகோர் மொரோஸோவ் எனும் ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் உக்ரைன் அணு ஆயுதம் தயாரிக்க பாகிஸ்தான் உதவியை நாடியதாகவும் இது தொடர்பாக ஒரு குழு பாகிஸ்தான் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை இகோர் மொரோஸோவ் உக்ரைனில் அணு ஆயுத சீண்டல் யாருக்கு தேவை ?? எனும் தலைப்பில் நடைபெற்ற செய்தி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போது முன்வைத்தார்.

மேலும் பேசும்போது அவர் உக்ரைன் அணு ஆயுதத்தை ரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்த நினைப்பது ஒன்றும் ரகசியமல்ல ஆனால் அதை தயாரிக்க தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நிதி ஆதாரம் பெரும் தடையாக அடிப்படை சிக்கலாக அமைந்துள்ளன.

உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தலைவர்களுடனும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம் எனவும், Tochka-U டோச்கா-யு எனும் சிறிய பலிஸ்டிக் ஏவுகணையில் சிறிய அணு ஆயுதம் பொருத்தி பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் ரஷ்ய படைகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக குற்றம்சாட்டிய நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளதும் ஆனால் இவற்றிற்கான ஆதாரம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.