இந்தியாவில் துப்பாக்கி தயாரிக்க உள்ள UAEயின் Edge குழுமம் !!

  • Tamil Defense
  • November 6, 2022
  • Comments Off on இந்தியாவில் துப்பாக்கி தயாரிக்க உள்ள UAEயின் Edge குழுமம் !!

ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates நாட்டை சேர்ந்த EDGE GROUP அதாவது எட்ஜ் குழுமத்தின் ஒரு பிரிவு தான் Caracal கராக்கல் ஆகும் இந்த நிறுவனம் துப்பாக்கிகளை தயாரித்து வருகிறது, இவை உலகின் பல நாடுகளாலும் பயன்படுத்தி வரப்படுகின்றன.

இந்த கராக்கல் குழுமம் இந்திய தரைப்படைக்கு சுமார் 90,000 CAR816 ரக துப்பாக்கிகளை தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றது ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய தயாரிப்பு துப்பாக்கியை வாங்கும் விதமாக மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த கராக்கல் நிறுவனம் இந்தியாவில் கூட்டு தயாரிப்பு முறையில் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து துப்பாக்கிகளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளது, இதற்காக ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகி உள்ளது.

ஹைதராபாத் நகரை சேர்ந்த ICOMM நிறுவனத்துடன் Caracal International புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹமாத் அலமேரி இந்திய நிறுவறங்களின் உதவியோடு Caracal India நிறுவனம் ஆயுதங்களை தயாரிக்கும் என கூறினார்.