பாகிஸ்தான் அமெரிக்கா மற்றும் இந்தியாவை எதிர்க்க ஒரு சைபர் கட்டமைப்பை உருவாக்க துருக்கி உதவியதாக கிரேக்க நாட்டை சேர்ந்த Greekcitytimes எனும் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பாகிஸ்தானுக்கு துருக்கி உள்துறை அமைச்சர் சுலேமான் சோலு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த சென்றார் அங்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷெஹ்ரிர் கான் அஃப்ரிடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த இருதரப்பு முடிவடைந்த பிறகு பாக் உள்துறை அமைச்சர் அஃப்ரிடி துருக்கி உள்துறை அமைச்சர் சுலேமான் சோலுவுடன் தன்னந்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், அப்போது அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பாகிஸ்தானை சர்வதேச அளவில் மட்டம் தட்டுவதை தடுக்க ஒரு சைபர் கட்டமைப்பை உருவாக்க உதவி கோரியுள்ளார்.
இதை ஏற்று கொண்ட துருக்கி தனது Emniyet என அழைக்கப்படும் துருக்கி தேசிய காவல்துறையை சேர்ந்த ஐந்து மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பியது அவர்கள் அங்கு அந்த கட்டமைப்பை உருவாக்க முழு மூச்சாக உதவியுள்ளனர்.
தற்போது பாகிஸ்தான் கைவசம் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 6000 பாகிஸ்தானிய காவல்துறை அதிகாரிகளை கொண்ட ஒரு சைபர் ராணுவம் உள்ளதாக கூறப்படுகிறது, இதை கொண்டு பாகிஸ்தான் இணையதளத்தில் தனக்கு சாதகமாகவும் இந்தியா அமெரிக்கா மற்றும் வேறு பல நாடுகளை எதிர்த்தும் தகவல்களை பரப்பி வருகிறது.
இந்த உதவி பற்றி துருக்கி உள்துறை அமைச்சர் சுலேமான் சோலு மறைமுகமாக தகவல் தெரிவித்துள்ளார் அதாவது இந்த அக்டோபர் 13ஆம் தேதி ஒரு நாட்டின் சைபர் பாதுகாப்பை வலுபடுத்த உதவியதாகவும் அந்த நாடு துருக்கியில் இருந்து ஐந்து முதல் ஆறு மணி நேரம் விமான பயண தொலைவில் உள்ளதாகவும் கூறினார் இதை நிபுணர்கள் பாகிஸ்தான் தான் என கூறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒத்துழைப்பு முதலில் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது அதனால் தான் இருதரப்பு சந்திப்பில் கூட விவாதிக்காமல் இரு நாட்டு அமைச்சர்களும் தன்னந்தனியாக பேசியுள்ளனர், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடைய உத்தரவின்படி இது செயல்படுத்தப்பட்டு உள்ளது மேலும் துருக்கி பாகிஸ்தான் இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் வருகிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.