இந்திய கடற்படையின் சோனார் அமைப்புகளை சோதனை செய்யும் அதிநவீன சுதேசி மையம் திறப்பு !!

  • Tamil Defense
  • November 8, 2022
  • Comments Off on இந்திய கடற்படையின் சோனார் அமைப்புகளை சோதனை செய்யும் அதிநவீன சுதேசி மையம் திறப்பு !!

DRDO Defence Research & Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது கேரள மாநிலம் கொச்சி நகரில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு அதிநவீன சோதனை மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளது.

இந்த சோதனை மையம் SPACE – Submersible Platform for Acoustic Characterisation & Evaluation என அழைக்கப்படுகிறது இந்த மையம் இந்திய கடற்படையின் சோனார் மற்றும் அது சார்ந்த பல்வேறு வகையான அமைப்புகள் மற்றும் தெழில்நுட்பங்களை சோதனை செய்ய உதவும் என கூறப்படுகிறது.

சோனார் என்பது நீருக்கடியில் உள்ள நிலபரப்பு, நீர்மூழ்கிகள், நீரடிகணைகளை ஒலி மூலமாக கண்டறிய உதவும் கருவியாகும், ஆகவே இந்த SPACE அமைப்பை சுமார் 100 மீட்டர்கள் ஆழம் வரை தாழ்த்தி சோதனை செய்ய முடியும், இந்த மையம் தற்போது கெச்சியில் உள்ள NPOL – Naval Physical & Oceanographic Labaratory ஆய்வகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

NPOL மற்றும் DRDO வடிவமைத்து இந்த சோதனை அமைப்பு அவற்றின் மேற்பார்வையின் கீழ் சென்னையில் உள்ள Larsen & Toubro லார்சன் மற்றும் டூப்ரோ கப்பல் கட்டுமான தளத்தால் கட்டபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.