சீன கடற்படை கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் இலங்கை டேங்கர் கப்பல்கள்; இந்தியா கவலை !!

  • Tamil Defense
  • November 4, 2022
  • Comments Off on சீன கடற்படை கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் இலங்கை டேங்கர் கப்பல்கள்; இந்தியா கவலை !!

சமீபத்தில் இலங்கை நாட்டின் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் ஆழ்கடல் சென்று சீன கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இலங்கை டேங்கர் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருளை நிரப்பி கொண்டு ஆழ்கடல் சென்று அங்கு காத்திருக்கும் சீன கடற்படையின் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பி வருகின்றன.

இந்த விவகாரம் தற்போது இந்தியாவின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது அதே போல் அமெரிக்காவும் கவலை தெரிவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன கண்காணிப்பு கப்பல் வந்து பிரச்சினை ஏற்பட்ட நிலையில் தற்போது அத்தகைய பிரச்சினைகளை தவிர்க்க இந்த முறை கையாளப்படுவதாக நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.