அர்மீனிய செயற்கைகோளை விண்ணில் ஏவிய இந்திய நிறுவனம் !!

  • Tamil Defense
  • November 20, 2022
  • Comments Off on அர்மீனிய செயற்கைகோளை விண்ணில் ஏவிய இந்திய நிறுவனம் !!

இந்தியாவின் தனியார் துறை நிறுவனமான Skyroot Aerospace ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட்டை ஏவி புதிய வரலாற்றை படைத்தது, இந்த ராக்கெட்டின் பெயர் “Vikram – S” விக்ரம் எஸ் ஆகும்.

இந்த ஒற்றை நிலை கொண்ட ராக்கெட்டானதுஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுநளத்தில் இருந்து ஏவப்பட்டது, இதில் மூன்று செயற்கைகோள்கள் வைக்கப்பட்டு ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ஒரு செயற்கைகோள் இஸ்ரோவுடையது, மற்றொன்று SpaceKidz ஸ்பேஸ்கிட்ஸ் எனும் இந்திய தனியார் நிறுவனத்துடையது, கடைசி செயற்கைகோளானது அர்மீனியா நாட்டை சேர்ந்த Bazoomq நிறுவனம் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.