விரைவில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் சென்னை நிறுவனம் !!

  • Tamil Defense
  • November 21, 2022
  • Comments Off on விரைவில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் சென்னை நிறுவனம் !!

சமீபத்தில் Skyroot Aerospace ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் எனும் நிறுவனம் தன்னுடைய Vikram – S விக்ரம் எஸ் எனும் நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டை ISRO எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியோடு வெற்றிகரமாக ஏவி புதிய வரலாற்றை உருவாக்கியது.

இதனை தொடர்ந்து சென்னையை தளமாக கொண்ட Agnikul Cosmos அக்னிகுல் காஸ்மோஸ் எனும் சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட தனியார் துறை நிறுவனம் நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த புதிய தனியார் ஏவுதளமானது ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அமைப்பின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் தான் இந்த ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது ஆறு மாதங்கள் முன் பணிகள் துவங்கிய நிலையில் விரைவில் நிறைவடைய உள்ளது என கூறப்படுகிறது.

இது பற்றி அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஶ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறும்போது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் போலின்றி எங்களுடைய ராக்கெட்டால் இஸ்ரோவின் ஏவுதளங்களை பயன்படுத்தி கொள்ள முடியாது ஆகவே எங்களது Agnibaan அக்னிபான் ராக்கெட்டிற்கு ஏற்ற ஏவுதளம் தேவைப்பட்டதால் இதனை நிறுவுகிறோம் என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது வருகிற டிசம்பர் மாதம் அக்னிபான் ராக்கெட் முதல்முறையாக ஏவி சோதனை செய்யப்படும் அப்போது பல்வேறு அமைப்புகளின் செயல்பாடு கண்காணிக்கப்படும் இது வெற்றியடையும் பட்சத்தில் அடுத்தபடியாக செயற்கைகோள்களை ஏவலாம் என கூறியது குறிப்பிடத்தக்கது.