2023 வாக்கில் இந்தியாவுக்கு போர் கப்பல் டெலிவரி செய்ய உள்ள ரஷ்யா !!

  • Tamil Defense
  • November 24, 2022
  • Comments Off on 2023 வாக்கில் இந்தியாவுக்கு போர் கப்பல் டெலிவரி செய்ய உள்ள ரஷ்யா !!

ரஷ்யாவின் யாந்தர் கப்பல் கட்டுமான தளமானது இந்திய கடற்படைக்காக கட்டமைத்து வரும் இரண்டு தல்வார் ரக ஃப்ரிகேட் கப்பல்களில் முதலாவது போர் கப்பலான INS TUSHIL துஷிலை அடுத்த ஆண்டு டெலிவரி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு துஷில் கடலில் இறக்கப்பட்டது மீதமுள்ள ஒரு கப்பல் விரைவில் கட்டி முடிக்கப்படும் எனவும் மீதமுள்ள இரண்டு போர் கப்பல்களும் இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான தளத்தால் கட்டமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகை போர் கப்பல்கள் வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் இதற்காக ஒரு A-190 100 மில்லிமீட்டர் பிரங்கி, Kalibr, Brahmos போன்ற ஏவுகணைகள் மற்றும் நீரடிகணைகளை கொண்டிருக்கும்.

3260 டன்கள் எடை கொண்ட இந்த கப்பல்கள், மணிக்கு 30 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும், சுமார் 4850 மைல்கள் தொலைவிற்கு இவை தொடர்ந்து பயணிக்கும் ஆற்றல் கொண்டவையாகும் இவற்றில் ஒரு Kamov Ka-27 கடல்சார் ஹெலிகாப்டர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.