ரஷ்ய நீர்மூழ்கியில் இருந்து அணு ஆயுத தாக்குதல் ஏவுகணை ஏவி சோதனை !!

  • Tamil Defense
  • November 8, 2022
  • Comments Off on ரஷ்ய நீர்மூழ்கியில் இருந்து அணு ஆயுத தாக்குதல் ஏவுகணை ஏவி சோதனை !!

ரஷ்ய கடற்படையின் Borei – A போரெய்-ஏ ரக அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத ஏவுகணை நீர்மூழ்கி கப்பலான ஜெனரலசிம்மஸ் சுவோரோவ் சமீபத்தில் சோதனை நடத்தியது.

அப்போது வெள்ளை கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த அந்த கப்பலில் இருந்து Bulava பூலாவா ரக அணு ஆயுத பலிஸ்டிக் ஏவுகணை ஒன்று நீர்மூழ்கி கப்பலின் இறுதிகட்ட சோதனை நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சோதனையின் போது நீர்மூழ்கி கப்பல் வெள்ளை கடல் பகுதியில் நீருக்கடியில் இருந்து ஏவிய ஏவுகணை சுமார் 5000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள காம்சட்கா தீபகற்ப பகுதியில் உள்ள குரா சோதனை தளத்தில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

இந்த ஜெனரலசிம்மஸ் சுவோரோவ் ரக நீர்மூழ்கி கப்பலானது போரெய்-ஏ ரகத்தின் இரண்டாவது கப்பலாகும், விரைவில் ரஷ்ய கடற்படையின் பசிஃபிக் படைப்பிரிவில் இணைய உள்ள இந்த கப்பலில் அணு ஆயுத ஏவுகணைகள், நீரடிகணைகள், அதிநவீன சோனார், ரேடார், தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன மேலும் எதிரிகளின் கண்காணிப்பில் அவ்வளவு எளிதாக சிக்காத வகையில் குறைந்த சப்தம் வெளிபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது இதன் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.