மேலும் வலுப்பெறும் இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் !!

  • Tamil Defense
  • November 15, 2022
  • Comments Off on மேலும் வலுப்பெறும் இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் !!

வருகிற டிசம்பர் மாதம் இந்திய விமானப்படை தனது கடைசி ரஃபேல் போர் விமானத்தை பெற்று கொள்ள உள்ளது, இந்த விமானம் தான் இந்தியா கோரிய பிரத்தியேக 13 சிறப்பம்சங்களை சோதனை செய்ய பயன்படுத்தப்பட்ட விமானம் என கூறப்படுகிறது.

தற்போது இந்த விமானத்தை கொண்டு புதியதாக மேலும் இரண்டு புதிய அம்சங்களை சோதனை செய்ய உள்ளனர், இவை ஏற்கனவே இந்தியா கோரி ஃபிரான்ஸ் ஒப்பு கொண்ட 13 பிரத்தியேக தொழில்நுட்ப அமைப்புகளில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அதிநவீன தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் இந்திய தயாரிப்பு மின்னனு போரியல் அமைப்பு ஆகியவை இணைக்கப்பட உள்ளன, இந்திய விமானப்படை இவற்றின் தேவையை உணர்ந்த நிலையில் அவற்றை இணைத்து தர DASSAULT டஸ்ஸால்ட் நிறுவனமும் ஒப்பு கொண்டுள்ளது.

இந்த கடைசி விமானத்தில் மேற்குறிப்பிட்ட அமைப்புகள் ஃபிரான்ஸ் நாட்டிலேயே இணைக்கப்படும் மீதமுள்ள 35 விமானங்களிலும் மேற்குறிப்பிட்ட அமைப்புகள் HAL ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் இந்தியாவிலேயே அடுத்த 12 மாதங்களுக்கு உள்ளாக இணைக்கப்படும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.