கால்பந்து உலக கோப்பை போட்டிக்கு செல்லும் போலந்து அணிக்கு போர் விமானங்கள் பாதுகாப்பு !!

வளைகுடா நாடான கத்தாரில் துவங்கியுள்ள FIFA ஃபிஓபா கால்பந்து உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ள போலந்து நாட்டின் தேசிய அணி பயணம் மேற்கொண்டது.

அந்த அணி பயணித்த விமானத்திற்கு போலந்து விமானப்படையின் இரண்டு F – 16, எஃப் – 16 போர் விமானங்கள் இரு புறமும் சென்று போலந்து வான் பரப்பை தாண்டும் வரை பாதுகாப்பு அளித்தன.

போலந்து அணி எல்லைக்கு அப்பால் உள்ள உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர் அதையொட்டி ரஷ்யாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் சமீபத்திய ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றிற்கு இடையே உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ள செல்வது குறிப்பிடத்தக்கது.

போலந்து தேசிய கால்பந்து அணியானது தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தங்களுக்கு பாதுகாப்பு அளித்த போலந்து விமானப்படை மற்றும் இரண்டு F – 16 போர் விமானங்களின் விமானிகளுக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளது சிறப்பு ஆகும்.