ஆம்கா போர் விமான என்ஜின் திட்டத்தில் இணைய விரும்பும் தனியார் நிறுவனம் !!

  • Tamil Defense
  • November 17, 2022
  • Comments Off on ஆம்கா போர் விமான என்ஜின் திட்டத்தில் இணைய விரும்பும் தனியார் நிறுவனம் !!

மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பாரத் ஃபோர்ஜ் Bharat Forge எனும் தனியார் துறை நிறுவனமானது இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA ஆம்காவுக்கான என்ஜின் தயாரிப்பு திட்டத்தில் இணைய விரும்புகிறது.

ஆம்கா விமானத்திற்கு 110 – 130 கிலோ நியூட்டன் ஆற்றல் வெளிப்படுத்தும் என்ஜின் தேவை அதை உருவாக்குவதற்காக இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறாவனங்கள் கூட்டாக உருவாக்க உள்ள கூட்டு நிறுவனத்தில் இணைய வேண்டி பார்த் ஃபோர்ஜ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டு நிறுவனத்தை இந்திய பொதுத்துறை நிறுவனங்களான HAL Hindustan Aeronautics Limited , GTRE Gas Turbine Research Establishment மற்றும் ADA Aeronautical Development Agency ஆகியவை கூட்டாக வழிநடத்த உள்ளன, இந்த கூட்டு நிறுவனத்தில் தனியார் துறை நிறுவனங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பங்களிப்புகளை செய்யும் அதாவது என்ஜின் பாகங்களின் தயாரிப்பு மற்றும் சப்ளை பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே உலோகம் மற்றும் உலோகவியல் சார்ந்த பணிகளில் ஏற்கனவே முன் அனுபவம் வாய்ந்த பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce, போயிங் Boieng உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான என்ஜின் மற்றும் விமான பாகங்களை தயாரித்து சப்ளை செய்து வருகிறது.

தற்போது இந்தியாவை பொறுத்தவரையில் விமான தயாரிப்பு மற்றும் என்ஜின் தயாரிப்பு அடுத்த மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ள துறையாக கருதப்படும் காரணத்தால் இந்த துறையிலும் கால்பதிக்க பார்த் ஃபோர்ஜ் Bharat Forge நிறுவனம் திட்டமிட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.